தேர்தல் முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

  அனிதா   | Last Modified : 26 May, 2019 11:50 am
evidence-of-electoral-malpractice-has-been-received-evks

தேனி தொகுதியில் தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி என்றும் அதிகாரம், பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தேனி தொகுதியில் தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், பல இயந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த சீல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அகற்றப்பட்டிருந்ததாகவும் கூறினார். 

தேனி தொகுதியில் நிகழ்ந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்வது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை வெற்றிபெற செய்வதற்கு பிரதமர் மோடி உதவியதாக குற்றம்சாட்டினார். மேலும், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்ற தமிழக பாஜகவினர் மீது இல்லாத அக்கறை ஓபிஎஸ் மீது மட்டும் ஏன்? என கேள்வி எழுப்பினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close