பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு!

  அனிதா   | Last Modified : 27 May, 2019 02:30 pm
invited-to-kamal-participate-in-the-pm-s-swearing-in-ceremony

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களைவை தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வரும் 30ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தொடர்பாக கமல்ஹாசன் இன்னும் முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close