தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 05:35 pm
school-opening-june-3-in-tamilnadu

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

வெயிலின் கொடுமையால் பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து, இந்த செய்தி தவறானது, பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைக்கும் எண்ணம் இல்லை, தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 2019-20 ஆம் கல்வியாண்ட்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கவேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close