உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்

  அனிதா   | Last Modified : 29 May, 2019 03:47 pm
supreme-court-advice-is-good-advice-karthi-chidambaram

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மீது கவனம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது நல்ல அறிவுரைதான் என காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான் என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறினார். 

இந்தியாவில் நாளை அமையவுள்ள புதிய அரசு அனைவருக்கும் பொதுவான அரசாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது என்றும், தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து  உரிமையை பெறுவோம் எனவும் தெரிவித்தார். 

மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரின் விருப்பம் என்றும், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். காங்கிரஸ் வெற்றி தோல்விகளை சந்தித்த கட்சி என்பதால் தோல்வியிலிருந்து காங்கிரஸ் மீண்டும் எழுந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close