ராகுல் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள்! சென்னையில் காங்கிரஸ் பேரணி..

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 05:17 pm
congress-rally-for-rahul-gandhi-to-be-continued-as-congress-president

ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று டெல்லியில் அவரது இல்லம் முன்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவித்துள்ளனர். அதேபோன்று தமிழகத்திலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. 

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார். இந்நிலையில் காரிய கமிட்டி தனது ராஜினாமாவை ஏற்காவிட்டாலும், ராஜினாமா செய்வதில் ராகுல் திட்டவட்டமாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

இதையடுத்து, ராகுலுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினும், ராகுலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லம் முன்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவித்துள்ளனர். கையில் பதாகைகளுடன் பேரணியாக வந்துள்ள அவர்கள், 'ராகுல் தான் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று தமிழகத்திலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேனாம்பேட்டையில் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள காமராஜர் சிலை முன்பாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close