தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 05:25 pm
congress-executive-suicide-attempt

சேலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது. இந்த  தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை நிராகரித்த போதிலும், அவர் ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக தகவலைகள் வெளிவருகின்றன. 

இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி தன்னுடைய தலைவர் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் 

இந்த நிலையில் இன்று சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது பதவியில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், தற்கொலைக்கு முயன்ற பச்சப்பட்டி பழனிசாமி அவர்களை சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close