'மீம்ஸ்களின் அரசன்' வடிவேலுவை உலக அளவில் ட்ரெண்டாக்கிய #PrayForNesamani ஹேஷ்டேக்!

  முத்துமாரி   | Last Modified : 30 May, 2019 05:17 pm
prayfornesamani-trending-in-social-media

சமூக வலைத்தளங்களில் தற்போது மீம்ஸ்கள் பெரிதும் ஆக்கிரமித்துள்ளன. மீம்ஸ்கள் ஒரு செய்தியை சற்று நகைச்சுவையோடு தருவதால் மக்களும் இதனை ரசிப்பதுடன் மற்றவருக்கும் பகிர்கின்றனர். அதேபோன்று எந்த ஒரு சிறிய சம்பவம் நடந்தாலும், அந்த சம்பவத்தின் முழு செய்தி வருவதற்குள் மீம்ஸ்கள் வெளிவந்துவிடும்.

அந்த வகையில், மீம்ஸ்கள் என்றால் அதற்கு 'தலைவர் வடிவேலு' தான். 'தலைவர்' என்பது 'வைகைப்புயல்' வடிவேலுக்கு நெட்டிசன்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர். வடிவேலு நடித்துள்ள பெரும்பாலான படங்களில் அவரது முகபாவனைகள், வசனங்களுடன் பொருந்திப்போவதால் சமூக வலைத்தளங்களில் 'தலைவர்' எப்போவுமே ட்ரெண்டிங் தான். 

இந்த நிலையில், தற்போது திடீரென #PrayForNesamani என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர். வடிவேலு நடித்த 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தான் நேசமணி. ஃஃப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

அந்த படத்தில், ஒரு காட்சியில் அவரது தலையில் சுத்தியல் விழுந்துவிடும். இதை வைத்து தான் தற்போது நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். வடிவேலுவின் தலையில் சுத்தியில் விழும் அந்த புகைப்படத்தை வைத்து, உண்மையில் நேசமணி தலையில் சுத்தி விழுந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார், அவர் குணமாக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்ற கோணத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

இதையடுத்து #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

#PrayForNesamani அனல் பறக்கும் மீம்ஸ்களின் தொகுப்பு

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close