வாக்குப்பதிவின் போது உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 01:37 pm
cm-edappadi-palanisamy-gives-compensation-for-people-who-died-at-election-voting

மக்களவைத் தேர்தலின்போது வாக்களிக்க வந்த வாக்காளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நிதியுதவி அறிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மே 19ஆம் தேதி 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close