8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 12:13 pm
the-government-appealed-to-the-supreme-court

சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அப்போது, நிலம் கையப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

பூவுலகின் நண்பர்கள், திமுக சார்பில் வழக்கறிஞர்கள்,  நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் இத்திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். 

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்றும் இத்திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு வருகிற ஜூன் 3ம் தேதி(திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. 

newstm.in

8 வழிச்சாலை திட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close