2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 12:33 pm
sc-sent-notice-to-raja-kanimozhi-in-2g-case

2ஜி அலைக்கற்றை வழக்கு விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றத்திற்கு சிபிஐ கோரிக்கை வைத்துள்ளதை அடுத்து,  2ஜி வழக்கில் தொடர்புடைய கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கருதப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி தீர்ப்பளித்தது. 

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, சிபிஐ இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு 2ஜி வழக்கில் தொடர்புடைய கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு வருகிற ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மக்கள் நலன் சார்ந்த வழக்கு என்பதால் 2ஜி அலைக்கற்றை வழக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close