போர் வீரர்கள் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 09:40 am
rajnath-singh-paid-tributes-to-the-martyred-soldiers

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இன்று பதவி ஏற்பதை அடுத்து, டெல்லியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் அவர் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படைகளின் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் மோடி  பதவியேற்றார். தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து, நேற்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. அதன்படி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்பதையடுத்து, அதற்கு முன்பாக டெல்லியில் போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும், முப்படைகளின் தளபதிககளும் போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close