10 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 10:18 am
train-service-started-from-thiruvarur-to-karaikudi

சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு திருவாரூர் - காரைக்குடி இடையேயான ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி செல்வராஜ் இந்த ரயில் சேவையினை இன்று தொடக்கி வைத்தார். 

கடந்த 2009ஆம் ஆண்டு அகல ரயில்பாதை பணிகளுக்காக திருவாரூர்- காரைக்குடி இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இருந்தும், இப்பகுதி மக்கள் இந்த ரயில் சேவையை நினைத்து சோகமாக இருக்கின்றனர்.

அதற்கு காரணம் என்னவென்றால், சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் கடக்க 6 மணி நேரம் ஆகிறது. அதாவது 20 கிலோ மீட்டருக்கு குறைவாகவே ரயிலின் வேகம் இருக்கிறது. மேலும், திருவாரூர் - காரைக்குடி இடையே மொத்தம் உள்ள 75 கேட்களில் 67 கேட்களில் கேட் கீப்பர்கள் இல்லை. இதன் காரணமாக ரயிலில் 2 மொபைல் கேட் கீப்பர்கள் பயணிக்கின்றனர்.

ரயில்வே கேட் அருகே ரயில் செல்லும் போது, ரயிலின் முன்பகுதி பெட்டியில் உள்ள கேட் கீப்பர் இறங்கி ரயில்வே கேட்டை மூடுவார். பின்னர் ரயில் கடந்து பிறகு, பின்பகுதியில் உள்ள கேட் கீப்பர் கீழே இறங்கி, ரயில்வே கேட்டை திறந்து விட்டு வருவார். இதனால் ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ரயில் நின்று செல்வதால் தான் நேரம் அதிகமாகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ரயில்வே மேலாளரிடம் மனு அளித்துள்ளனர். ரயில்வே கேட் கீப்பர் களில் விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட்டு ரயில் பயண நேரம் குறைக்கப்படும் என்று ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை 3 மாத காலத்திற்கு மட்டும் ரயில் சேவை வழங்கப்படும். இந்த 3 மாத காலத்தில் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் ரயில் சேவை தொடர்ந்து அளிக்கப்படுமா? என்பதை ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் நேரம்: திருவாரூரில் இருந்து காலை 8.15க்கு புறப்படும் ரயில் காரைக்குடியை பிற்பகல் 2.15க்கு சென்றடைகிறது. அதேபோன்று மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து  பிற்பகல் 2.30க்கு புறப்படும் ரயில், இரவு 8.15க்கு திருவாரூரை சென்றடைகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close