கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பொறியியல் விண்ணப்பங்கள் குறைந்தது!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 03:16 pm
1-lakh-30-thousand-application-came-for-engineering-counselling

கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 25,000 விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தான் நடத்துகிறது. விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளதால் நடப்பாண்டு முதல்கட்ட கலந்தாய்விலே விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

வருகிற 20ஆம் தேதியிலிருந்து சிறப்பு பிரிவினருக்கும், ஜூலை 3ம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பொறியியல் படித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுவதாலும் தான், நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு குறைவான மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close