தேர்தலில் தோற்றதால் அமமுக அழிந்துபோகாது: டி.டி.வி தினகரன்

  அனிதா   | Last Modified : 01 Jun, 2019 04:54 pm
ammk-will-not-disintegrate-ttv-dinakaran

தேர்தலில் தோற்றதால் அமமுக அழிந்துபோகாது எனவும் திமுக, அதிமுக கட்சிகளும் பெரும் தோல்வியை சந்தித்துள்ள வரலாறும் தமிழகத்தில் உண்டு எனவும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் அமமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், தேர்தலில் பெரிய வெற்றியை எதிர்பார்த்தாலும் தோல்வியை கண்டு அமமுக துவளவில்லை எனவும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்கள் கட்சி குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

எட்டுவழிச் சாலைக்கு எந்த கட்சி ஆதரவு தெரிவித்தாலும், தமிழக மக்கள் அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் எனவும் அமமுகவின் நிலைபாடும் அதுவே எனவும் கூறினார்.  யார் தன்னை விட்டு விலகினாலும் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்படமாட்டேன் எனக்கூறிய அவர், கட்சியை விட்டு விலகவும், சேரவும் அமமுக யாருக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

தேர்தலில் தோற்றதால் அமமுக அழிந்துபோகாது எனவும் இதற்குமுன் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் பெரும் தோல்வியயை சந்தித்துள்ள வரலாறு தமிழகத்தில் உண்டு எனவும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close