ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 09:47 am
upsc-preliminary-exam-starts-today

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் ஆட்சித்துறை, காவல்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 896 உயர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்( UPSC) சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது.

மூன்று நிலைகளாக நடைபெறும் இந்த தேர்வின் முதல்நிலைத் தேர்வு (Preliminary test) இன்று நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 72 நகரங்களில் இந்த தேர்வானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள முதன்மை தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து நேர்காணலுக்கு அனுப்பப்படுவர். பின்னர், முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் முடிவுகள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close