இந்தியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய முடியாது: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 09:58 am
tamilisai-talks-about-hindi-imposition

தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை உறுதி அளித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தூத்துக்குடியில் எனக்கு 2 அரை லட்சம் மக்கள் வாக்கு அளித்திருக்கிறார்கள். தொடர்ந்து பிரச்சாரத்தின் போது என்ன செய்வேன் என்று கூறினேனோ, அதை செய்து வருவேன். மக்களை திசை திருப்ப திமுக நாடகம் ஆடி வருகிறது. இந்தியை வைத்து திமுக - காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறார்கள். 

தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது. இப்போதைய பரிந்துரை தான். மக்கள் கருத்துக்களை கேட்ட பிறகே கொண்டு வருவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். எனவே, இந்தியை வைத்து ஸ்டாலின் இனிமேல் அரசியல் செய்ய முடியாது. 

பா.ஜ.கவின் கோர முகம் தெரிகிறது என்று ப.சிதம்பரம் கூறுவது தவறு. இவற்றை அடித்தளம்மிட்டதே அவர் தான்.  மும்மொழி கொள்கை வந்தால் தமிழ் போன்ற அருமையான மொழியை பிற மாநிலத்தவர்கள் கற்பார்கள். 

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து, அதிமுக தலைமையும், பாஜக தலைமையும் தான் முடிவு செய்யும்" என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close