கலைஞர் பிறந்தநாள்: நாளை திமுகவின் நன்றி தெரிவிக்கும் கூட்டம்

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 11:37 am
dmk-meeting-on-june-3rd

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சேர்த்து மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வருகிற நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. 

ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக கூட்டம் நடக்க இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக & கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்று தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். 

மேலும், அதற்கு முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார். இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close