கோவில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தியது தமிழக அரசு!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 02:52 pm
tn-govt-order-reg-hr-ce-department

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிரந்தர கோவில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள், பணியின் போது உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியானது ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். 

மேலும், நிரந்தர கோவில் பணியாளர்களுக்கான மாத சந்தாவும் ரூ. 15 லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பணியாளர்களிடம் பிடிக்கப்படும் மாத சந்தா ரூ..15க்கு பதிலாக ரூ. 60 வசூலிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close