மாணாக்கர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 02:39 pm
school-students-can-use-old-bus-pass-for-travelling-by-bus

நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதையடுத்து புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, மாணாக்கர்கள் பேருந்துகளில் பயணிக்க பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணாக்கர்கள், பேருந்துகளில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. புதிய கல்வி ஆண்டு நாளை தொடங்க உள்ளதால்,  நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் பள்ளிகளில் இனி தான் தொடங்கும்.

எனவே, நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, மாணாக்கர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மாணாக்கர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தாலே, அவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close