நாளை சியாச்சின் செல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 03:27 pm
rajnath-singh-visiti-siachen-tomorrow

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இமய மலைத்தொடரில் உள்ள சியாச்சின் கிளேசியர் பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறார். 

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். கடந்த முறை கடந்த முறை உள்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சராக, ராஜ்நாத் சிங் நாளை முதலாவதாக சியாச்சின் கிளேசியர் பகுதிக்கு செல்ல இருக்கிறார். இமயமலைத்தொடரில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இப்பகுதி இந்திய - பாகிஸ்தான் எல்லை என்பதால் ராணுவ பாதுகாப்புப் படை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து அப்பகுதிகளில் இந்திய விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார். 

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தின் போது ராணுவத் தளபதி பிபின் ராவத் தும் உடன் செல்கிறார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close