கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு படையெடுக்கும் குழந்தைகள்!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 08:41 am
school-starts-today-in-tn

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெயிலின் தாக்கம், குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு பள்ளி திறக்கும் நாளை ஜூன் 3ல் இருந்து ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களது பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருந்தும், மாணவர்களின் நலன் கருதி ஜூன் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மாணவர்கள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். 

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலாக தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு சில தனியார் பள்ளிகள் வருகிற 7ம் தேதியும், சில தனியார் பள்ளிகள் 10ம் தேதியும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. 

அதே நேரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், வழங்கப்பட்டு வகுப்புகள் தொடங்குகின்றன.

இது தவிர, இன்று 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close