கருணாநிதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 09:12 am
mk-stalin-pays-his-tributes-to-karunanidhi

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோன்று, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆர். எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதன் தொடர்ச்சியாக, இன்று திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close