பொறியியல் கலந்தாய்வு: இன்று ரேண்டம் எண் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 11:11 am
engineering-counselling-date-announced

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்(சமவாய்ப்பு எண்) இன்று வெளியாகவுள்ளது. 

நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியானது. அதன்படி, வருகிற ஜூன் 20ஆம் தேதியிலிருந்து சிறப்பு பிரிவினருக்கும், ஜூலை 3ஆம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. 

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 25,000 விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து மாணவர்களின் 'கட்-ஆப்' மதிப்பெண்களின் அடிப்படையில் ரேண்டம் எண் இன்று வெளியாகவுள்ளது. ஜூன் 16ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். ஜூலை 3ம் தேதி முதல் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கலந்தாய்வு நடத்தி வரும் நிலையில், இந்தாண்டு முதல் முறையாக  தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close