இந்தி கட்டாயமில்லை! - புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்தது மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 10:23 am
hindi-language-is-not-compulsory-in-tn-schools

மும்மொழிக்கொள்கையின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை; விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்களே 3வது மொழியை தேர்வு செய்துகொள்ளலாம் என திருத்தப்பட்ட  புதிய கல்விக் கொள்கை வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வரைவில், மும்மொழிக்கொள்கை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மாணவர்கள் இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவதாக இந்தியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கையில், இது கல்விக்கொள்கையின் வரைவு தான். மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தது.

அதனடிப்படையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு இன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மாணவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு, மாணவர்களே மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்துகொள்ளலாம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close