பி.இ. படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

  முத்து   | Last Modified : 03 Jun, 2019 05:11 pm
be-random-number-issue-for-study

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 494 பொறியியல் கல்லூரிகளில் 1,72,148 இடங்களுக்கு 1,33,116 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். 

 www.eaonline.in என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ரேண்டம் எண் குறித்த தகவல்கள் மாணாவர்களின் தொலைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். 
ஜூன் 6 முதல் 11-ஆம் தேதி வரை கலந்தாய்வு உதவிமையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

ஜூன் 20-ஆம் தேதி சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 3-ஆம் தேதி தரவரிசை அடிப்படையிலும் கலந்தாய்வு தொடங்குகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் ஜூலை 25 முதல் 28-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 29-ஆம் தேதி பிளஸ் 2 சிறப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close