மிஸ் சௌத் இந்தியா பட்டம் பெற்ற அழகி மீது மோசடி புகார்!

  அனிதா   | Last Modified : 03 Jun, 2019 04:55 pm
fraud-complaint-against-miss-south-india-tittle-winner

மிஸ் தமிழ்நாடு, மிஸ் சௌத் இந்தியா பட்டம் பெற்ற அழகி மீரா மிதுன் மீது சென்னை காவல் நிலையங்களில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது

பிரபல மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த 30 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் மிஸ் சவுத் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கில் பிரவீன் என்பவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மிஸ் தமிழ்நாடு திவா 2019 நிகழ்ச்சி நடத்த தடை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். 

அன்றைய தினமே தென்னிந்திய அழகிப்பட்டம்  மீரா மிதுனிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்கு, மீராமிதுன் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இருந்து பட்டம் திரும்ப பெறப்பட்டதாக மிஸ் சவுத் இந்தியா நிர்வாகம் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், மிஸ் தமிழ்நாடு 2019 நிகழ்வை நடத்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் உரிமம் பெற்றதாகும். அந்த தலைப்பை தவறாக பயன்படுத்தி மீரா மிதுன் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி, ஆடை வடிவமைப்பாளர்களிடமும் மாடல் அழகிகளிடமும் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், ஜோ மைக்கேல் பிரவீன் தெரிவித்துள்ளார். 

மேலும், இது குறித்து தேனாம்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் நிலையங்களில் மீராமிதுன் மீது முன்பே புகார் அளித்திருப்பதாகவும், அதை மறைத்து  தற்போது தன் மீதும், அஜித் ரவி மீதும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்த மைக்கேல் பிரவீன், மிஸ் தமிழ்நாடு 2019 தலைப்பை தவறாக பயன்படுத்தும் மீராமிதுன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close