பைக் ரேஸ்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

  ராஜேஷ்.S   | Last Modified : 03 Jun, 2019 09:59 pm
bike-race-in-chennai-police-warning

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை தடுக்க காமராஜர் சாலையில் 29 இடங்களில் சோதனை தடுப்புகள் அமைக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆங்காங்கே சோதனை தடுப்புகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்ன மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.

சென்னையில் சாலை விதிகளை மீறியதாக நேற்று மட்டும் 242 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, அதிக நபர்கள் பயணம், ஹெல்மெட் இல்லாமல் பயணம் என வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 24 வாகனங்கள் பறிமுதல் செய்ததாகவும், ஆபத்தான விதத்தில் வாகனங்கள் ஓட்டியவர்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் பைக் ரேஸை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து  நடைபெறும் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close