பார்வையற்றோருக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி!

  ராஜேஷ்.S   | Last Modified : 03 Jun, 2019 10:02 pm
vocational-training-for-blind-people-with-help

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையத்தில், புத்தகம் கட்டுபவர் பிரிவில் பயிற்சி வழங்கப்படுவதாக தொழிற்பயிற்சி முதல்வர் அறிவித்துள்ளார்.

ஓராண்டுக்கான இந்த பயிற்சியில் 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயதுடைய பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள் ஜூன் 14 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,  விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தொழிற்பயிற்சி முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓராண்டுக்கான இந்த பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close