திருச்சி- சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 08:35 am
technical-fault-in-trichy-singapore-flight

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் 2 மணி நேரம் தாமதாமாக புறப்பட்டது.  

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தினந்தோறும் ஸ்கூட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படும். வழக்கம் போல் நேற்றிரவு திருச்சியிலிருந்து 113 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து, பயணிகள் விமானத்தில் இருந்தபடியே தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக 3.30 மணிக்கு விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.  இதனால் பயணிகள்  அவதியுற்றனர். தொழில்நுட்ப கோளாறு வானில் புறப்படுவதற்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close