மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை: டாக்டர்.கிருஷ்ணசுவாமி ஆதரவு...!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 01:26 pm
puthiya-tamilagam-party-support-for-three-language-policy

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கல்விக்கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கையில் பல்வேறு நல்ல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை வரவேற்கத்தக்கவை. மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், புதிய தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் மும்மொழி கொள்கையை வரவேற்கிறோம்.

தமிழ், ஆங்கிலம் தவிர இந்திய மக்களால் அதிகம் பேசக்கூடிய ஹிந்தி மொழியை கற்க வாய்ப்புகள் அதிகம் ஏற்படவில்லை. தற்போது அந்த வாய்ப்பு வந்துள்ளது. அதை நம் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் இலவசமாக ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். 

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஹிந்தியை கற்பது கட்டாயமில்லை. ஆனால் அதை கற்பதை ஏன் புறக்கணிக்க வேண்டும். ஹிந்தி கற்றுக்கொள்வதால் தமிழுக்கு எந்த குந்தகமும் ஏற்பட போவதில்லை. 6,7,8,9,10 ஆம் வகுப்புகளில் ஹிந்தியை கொண்டு வர வேண்டும்.

ஐ.ஏ.எஸ். போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் வடமாநிலங்களில் பணி அமர்த்தப்படும் பொழுது அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே  ஹிந்தி மொழியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் ஹிந்தி பேசும் உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பேசும் பொழுது ஹிந்தி தெரியாத உறுப்பினர்கள் அதனை புரிந்துகொள்ள இயலவில்லை.

திமுக மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஹிந்தியை எதிர்க்கின்றனர். ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்காலத்தை முடிவு செய்ய இவர்கள் யார்? ஹிந்தி வேண்டாம் என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்?

வசதி படைத்த மாணவர்களுக்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு உள்ளது. வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு ஹிந்தி படிக்க இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

எனவே, சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்றுக்கொடுப்பது வரவேற்கத்தக்கது என்றால் அரசு பள்ளிகளில் வந்தால் அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் ஹிந்தி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது நம் கடமை" என டாக்டர் கிருஷ்ணசுவாமி ஆணித்தரமாக கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close