கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 02:15 pm
sea-water-drinking-program-will-be-launched-in-a-one-or-two-week

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

சென்னை சிட்லபாக்கம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டிகளை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாடம்பாக்கம் எரியினை நீராதரமாக கொண்டு 5 கிணறுகள், 2 நீர்தேக்க தொட்டிகள் (1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி) உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கொண்டு, 5700 குடும்பங்களின் நீர் தேவை சரிசெய்யப்படும் என கூறினார். மேலும், நெம்மேலி பகுதியில் துவங்கப்பட உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஓரிரு வாரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு அத்திட்டம் துவங்க உள்ளதாக கூறிய அமைச்சர், அதற்கு அதிகளவில் நிதி தேவைப்பட்ட நிலையில் தற்போது அனைத்தும் தயாராக இருப்பாதாக கூறினார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்  முடிவுற்ற பின் சென்னையில் குடிநீர் பிரச்சினையே இருக்காது என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close