எச்சரிக்கை: போக்குவரத்து விதிகளை மீறும் ஊழியர்கள் பணி நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2019 09:57 pm
warning-catering-staff-sacked-for-breaching-traffic-rules

தங்களது ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று, தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் உள்ளிட்ட தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் மேலாளர்களுடன் போக்குவரத்து காவல் துறை இன்று ஆலோசனை  நடத்தியது.

இந்த ஆலோசனையின்போது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று உணவு விநியோக  நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உணவு விநியோக ஊழியர்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக. சென்னை மட்டும் இதுவரை 2,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close