வாகனம் ஓட்டிய சிறுவர்கள்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2019 11:29 pm
children-driving-case-for-parents

சென்னையில் 12 சிறுவர்கள் வாகனம் ஓட்டியதற்காக அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காமராஜர் சாலையில் அதிவேகமாகவும், ஆபத்தாகவும் வாகனங்களை ஓட்டியதற்காக 35 வழக்குகளும், மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 12 வழக்குகளும், தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டியதற்காக 157 வழக்குகள் என மொத்தம் 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், வாகன சோதனையின்போது 22 இருசக்கர வாகனங்கள் உள்பட 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close