கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 08:13 pm
if-you-need-hard-work-and-find-success-in-neet-exams

கடுமையான உழைப்பு இருந்தால்  நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று,  நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. இதில், தமிழக அளவில் மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்களுடன் முதலிடமும், தேசிய அளவில் 57-ஆவது இடமும் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ஸ்ருதி அளித்த பேட்டியில், ‘கடுமையான உழைப்பு இருந்தால்  நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. 2 ஆண்டுகள் எந்தவித தொந்தரவுமின்றி கடுமையாக படித்தால்  நீட் தேர்வில் பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close