பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு இன்று முதல் பதிவு செய்யலாம்!

  டேவிட்   | Last Modified : 06 Jun, 2019 08:36 am
sslc-practical-exam-students-can-apply-from-today

பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்கள் பெயர்களைப் இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

அனைத்து தனித் தேர்வர்களும் இன்று (ஜூன் 6)  முதல் ஜூன் 29-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு, மாவட்ட கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.  செய்முறைப் பயிற்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் தேதி, மையங்கள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விண்ணப்பம்  நிராகரிக்கப்படும்.  விண்ணப்பங்கள் http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம், பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு நகல்களை, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் வரும் 29-ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close