மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், ஆகியவற்றில் சேர, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் நேற்று (புதன்கிழமை) வெளியானது. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும், ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.