தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் தொடரும்: அமைச்சர் ஜெயக்குமார் 

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 11:26 am
minister-jayakumar-interview

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும், இதுவே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இரு மொழி கொள்கையை தான் பின்பற்றுவோம் என்றும்,எந்த நிலையிலும் இந்தியை ஏற்கமாட்டோம் இது தான் தமிழக அரசின் கொள்கை என கூறினார். 

பின்னர் முதல்வரின் ட்விட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்: கர்நாடக, ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  அடிப்படையில் தான் முதல்வர் டிவிட்டர் மூலம் பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் முதல்வரின் பதிவை  அரசியலாக்கியதால் அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது என தெரிவித்தார்.


மேலும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்றும், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின்  நிலைப்பாடும் இது தொடர்பாக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தை கொடுத்து வருகிறோம் என கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close