தமிழகத்தில் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையில் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு, ஊதியம், ஒரு தனி நபர் 8 மணி நேரத்திற்கு மேல் பணி புரிய கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in