ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பில்லை

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 06:51 pm
the-water-from-the-mettur-dam-on-june-12-is-not-open

குறுவை சாகுப்படிக்காக மேட்டூ அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருவாரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ்,  ‘ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படாது. ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம்’ என்றார்.

மேலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகம் அனுமதிக்காது என்று தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை சரிசெய்ய  தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close