தமிழகத்திற்காக குரல் கொடுப்பேன்: ரவீந்திரநாத் குமார்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 06:57 pm
i-will-voice-in-parliament-for-tamil-nadu-ravindranath-kumar

தமிழகத்தின் ஜீவாதாரன பிரச்னையான குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்திற்காக மக்களவையில் குரல் கொடுப்பேன் எனவும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன்  ரவீந்திரநாத்குமார் பாலமேடு அருகேயுள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் இன்று தரிசனம் செய்தார். தரிசனத்தை தொடர்ந்து வலையபட்டி, சத்திரவெல்லாலபட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பின்னர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்ற ரவீந்திரநாத் குமார் பொதுமக்கள் மத்தியில் பேசினார். 

அப்போது தொகுதியில் பிரதான பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை போக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்த ரவீந்திரநாத் குமார், மக்கள் குறைகளை மக்களில் ஒருவனாக இருந்து சரி செய்வேன் எனவும் மக்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதில் நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன் எனவும் உறுதியளித்தார். 

பின்னர் பேட்டியளித்த அவர், தேனி நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வகுத்த வியூகத்தினால் சரித்திர வெற்றி கிடைத்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதாரன பிரச்னையான குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close