வியாபாரிகளை மிரட்டும் வகையில் போலீசார் செயல்படக்கூடாது

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 06:58 pm
the-police-should-not-act-as-intimidating-businessmen

24 மணி  நேரமும் கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை வரவேற்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில்,  24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைக்க தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த அரசாணை தொடர்பாக விக்கிரமராஜா அளித்த பேட்டியில், ’24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அரசாணை வெளியிட்டது வரவேற்கத்தக்கது. இரவு  நேரக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தும். இரவில் வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகளை மிரட்டும் வகையில் போலீசார் செயல்படக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close