போக்குவரத்து விதி மீறல்: பொதுமக்களே புகார் அளிக்கும் புதிய செயலி அறிமுகம்!

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 03:29 pm
traffic-violation-introduction-of-new-app-to-the-public

போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது பொதுமக்களே புகைப்படத்துடன் புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார். 

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிநவீன இ- செலான் இயந்திரம் மற்றும் சாலை விதிமீறல்களை மக்களே புகார் அளிக்கும் வகையிலான புதிய செயலி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் அ.கா விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் (தெற்கு) மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-செயலி இயந்திரங்களை மாற்றி அதிநவீன செயல்பாடுகள் அடங்கிய 352 இ- செலான் இயந்திரங்களை 237 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் வழங்கினார்.

மேலும், சாலை விதிகளை மீறும் நபர்களை காணும் பொதுமக்கள், அவர்களே அதனை படமெடுத்து புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட GCTP Citizen Services என்னும் புதிய அலைபேசி செயலியையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close