தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு: பாலச்சந்திரன்

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 03:28 pm
southwest-monsoon-start-on-tomorrow-in-kerala

மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பலசந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்  கிழக்கு அரபி கடல் பகுதியில் தென் மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளதாகவும், இது தென் இந்தியாவின் தெற்கு பகுதியில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில், நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவும் நிலையில், நாளை (ஜூன் 8 ஆம் தேதி) கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுரளக்கோடு மற்றும் சிவலோகத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பசலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close