பைக் - கார் மோதல் : இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 07:58 pm
coimbatore-car-crash-kills-two-on-the-bike

கோவையில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவை கருமத்தம்பட்டி, தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வேலம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினரான முத்துக்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close