எம்.பி.பி.எஸ்., இடங்களை நிரப்புவதில் வேலுார் சி.எம்.சி.,க்கு விதிவிலக்கு!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 08:47 pm
vellore-cmc-gets-special-exemption-from-rules-on-mbbs-admission

மருத்துவ படிப்புக்கான இடங்களை இந்த ஆண்டு நிரப்புகையில், வேலுார் சி.எம்.சி.,மருத்துவக் கல்லுாரியில் உள்ள 100 இடங்களில், 74 இடங்களை  நிர்வாக ஒதுக்கீடு (மேனேஜ்மென்ட் கோட்டா) அடிப்படையில் நிரப்ப, மாநில சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. 

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், தங்கள் கல்லுாரிகளில் உள்ள மாெத்த இடங்களில், 35 - 50 சதவீத இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். 

அந்த இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள இடங்களில் மட்டுமே, தனியார் கல்லுாரிகள் மேனேஜ்மென்ட் கோட்டாவில் மாணவர்களை சேர்க்க முடியும். ஆனால், வேலுாரில் இயங்கி வரும், சி.எம்.சி., எனப்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரி நிர்வாகம், இந்த நடைமுறைய கடைபிடிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 

தங்கள் கல்லுாரியில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்வதால், தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரும் பரிந்துரைகளை ஏற்று, அவ்வகை மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் அளிக்க வேண்டும் எனவும், அந்த கல்லுாரி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது, விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களின்படி மெரிட் அடிப்படையில் 12 இடங்கள், எஸ்.சி., பிரிவினருக்கு 2 இடங்கள், எஸ்.டி., பிரிவினருக்கு 1 இடம் மற்றும் மத்திய அரசு கோட்டாவாக 1 இடத்தை ஒதுக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், சி.எம்.சி.,யில் பணியாற்றுவோரின் வாரிசுகளுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 74 இடங்களையும், சி.எம்.சி., நிர்வாகம், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்றும்கூட, கல்விக் கட்டணம் குறைவாக உள்ள சிஎம்சியில் அட்மிஷன் பெற முடியாமல் போகும் என, மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close