ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை!

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 01:34 pm
the-chance-of-moderate-rainfall-in-one-or-two-places

அடுத்த 42 மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 42 மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், அதிகப்பட்சமாக குமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை - 5 செ.மீ மழையும், நாகர்கோவிலில் 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. 

திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட  மாவட்டங்களில் வெயிலின் அளவு 2 ல் இருந்து 3 டிகிரி அதிகமாக இருக்கும்.

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது மதுரை வரை வந்துள்ளது என்றும், தென்மேற்கு பருவ மழையால் பெரிய அளவில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், இன்னும் சில நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close