சட்டமன்ற தேர்தலில் பாஜக பட்டையை கிளப்பும் பாருங்க...சொல்கிறார் உ.பி. துணை முதல்வர்!

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 03:43 pm
bjp-will-have-a-huge-impact-on-assembly-elections-dinesh-sharma

வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, சென்னை கமலாயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அரசு தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிமுகவுடன் நல்ல உடன்பாடு இருந்து வருகிறது. மத்தியில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம், தமிழகத்தில் பாஜக வலுப்பெற வேலை செய்து வருகின்றனர்.

தெலங்கானா, கர்நாடாகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாஜகவை எதிர்த்த போதிலும், பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஜாதி, மத, மொழி அடிப்படையில் எதிர்க்கட்சியினர் தேர்தலை சந்தித்தாகவும், ஆனால் பாஜக நல்ல திட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது என்று தினேஷ் சர்மா தெரிவித்தார்.

பேட்டியின்போது, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடனிருந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close