கீழடியில் அகழாய்வுப் பணி நாளை மீண்டும் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 05:28 pm
start-5th-stage-work-strat-from-tomorrow-in-keezadi

கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி நாளை தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும், ‘5-ஆம் கட்ட ஆய்வுக்காக மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்டுள்ளோம். மாநில அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. அரசியல் சாயம் கூடாது என்பதற்காக நாங்கள் 5-ஆம் கட்ட ஆய்வுக்காக கீழடிக்கு செல்லவில்லை. தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் அங்கு செல்கிறார். தமிழர்களின் தொன்மையை தடுக்க விரும்பும் எந்த சக்தியும் வெற்றி பெறாது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close