சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 06:06 pm
the-legislature-should-hold-a-meeting-stalin

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே நடத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’நிச்சயமற்ற அரசியல் சூழலால் சட்டமன்றத்தை கூட்ட முதல்வர் அச்சப்பட்டால், இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும். பேரவை கூட்டம்  நடைபெறாமல் இருப்பதும், அரசுத் துறை பணிகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. பேரவை கூட்டப்படுவதை தள்ளிப்போடுவது தேவையில்லா குழப்பங்களும்  நெருக்கடிக்கும் வழிவகுக்கும். தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை பற்றி விவாதிக்க சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்’  என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close