எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.15 கோடியில் தடுப்பு சுவர்!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 10:56 am
central-committee-study-in-thoppur

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றி ரூ.15 கோடியில் தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்தமாகியுள்ளது. 

நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக ரூ.1264 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இடம் வழங்கவில்லை என செய்திகள் வெளியானது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சஞ்சய்ராய் தலைமையிலான மத்தியக்குழு மற்றும்  ஜப்பானிய நிதிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரக துணை இயக்குநர் சபிதா, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றி ரூ.15 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் சில நாட்களில் தொடங்கி 3 மாதத்தில் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close